Thinesh Bakehouse

Call Directions Website Contact the business

Thinesh Bakehouse Jaffna's Leading Bake House

A teacher never expects a gift from us.Their greatest gift is seeing us do well in life. ❤️But sometimes, it’s our turn ...
05/10/2026

A teacher never expects a gift from us.
Their greatest gift is seeing us do well in life. ❤️

But sometimes, it’s our turn to make their day a little special.

It doesn’t have to be expensive.
A small gift made with love, a handwritten note, or simply saying “Thank you, Teacher” can mean more than we imagine.

Tomorrow is Teachers’ Day. 🌸
Just a little reminder from us — celebrate the people who helped shape who you are today.

And if a little sweetness can make that moment even more special, our Teachers’ Day cakes are ready. 🎂❤️

Rs 1500 onwards

26/09/2026

நேற்று மீண்டும் கதவுகளைத் திறந்தபோது… நான் கண்ட காட்சி என் மனதை நெகிழ வைத்தது. ❤️

கடை திறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் தயாரிப்புகளுக்காக வாடிக்கையாளர்கள் வெளியே காத்திருந்தார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
சாதாரண தொழிலாளர்கள் முதல் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் வரை…
பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்…

அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்கும்போது எனக்குள் வந்த உணர்வு ஒன்றுதான் —

“இவர்கள் வெறும் வாடிக்கையாளர்கள் அல்ல… 44 வருடங்களாக நாங்கள் சம்பாதித்த நம்பிக்கையின் முகங்கள்.” ❤️

கடந்த சில நாட்களில் விமர்சனங்களையும் சந்தித்தோம். தவறுகளையும் ஏற்றுக்கொண்டோம். திருத்த வேண்டியவற்றைத் திருத்தினோம்.

ஆனால் மீண்டும் கதவைத் திறந்தபோது, நீங்கள் வெளியே காத்திருந்து எங்களை வரவேற்ற அந்தக் காட்சி…
எந்த வார்த்தையாலும் சொல்ல முடியாத பதிலாக இருந்தது.

இதை ஒரு வெற்றியாக நான் பார்க்கவில்லை.
இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குக் கொடுத்த நினைவூட்டலாகவே பார்க்கிறேன்.

உங்கள் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும் தலைவணங்குகிறேன். 🙏❤️

இந்த நம்பிக்கையை காப்பாற்ற இன்னும் அதிகமாக உழைப்போம்.

நன்றி… நன்றி… நன்றி… ❤️
Thinesh Bake House

When we reopened our doors yesterday, what I saw truly touched my heart. ❤️

Customers were already waiting outside for our products — from young to old, from everyday working people to doctors, professionals and businesspeople, from every walk of life.

Looking at everyone together, I realised something:

You are not simply our customers. You are the faces behind the trust we have earned over 44 years. ❤️

We have listened to the criticism, accepted our shortcomings and corrected what needed to be corrected.

Seeing you waiting for us when our doors reopened was a moment words cannot describe.

I don’t see this as a victory. I see it as a reminder of the responsibility we carry to protect your trust every single day.

Thank you from the bottom of my heart. 🙏❤️

We will work even harder to deserve this love and trust.

மீண்டும் உங்கள் முன்… ❤️🙏இன்று, சுட்டிக்காட்டப்பட்ட தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்ததைத...
25/09/2026

மீண்டும் உங்கள் முன்… ❤️🙏

இன்று, சுட்டிக்காட்டப்பட்ட தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்ததைத் தொடர்ந்து, எமது விற்பனை நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சில நாட்கள் எங்களுக்கு ஒரு சாதாரண அனுபவமாக இருக்கவில்லை…
நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த நாட்கள்.

ஆனால் இந்த நேரத்தில் நான் அதிகமாக உணர்ந்த ஒன்று — நாங்கள் தனியாக இல்லை என்பதுதான். ❤️

தொலைபேசியில் அழைத்தவர்கள்…
செய்தி அனுப்பியவர்கள்…
பதிவுகளில் எங்களுக்காக எழுதியவர்கள்…
நேரில் வந்து தைரியம் கொடுத்தவர்கள்…
அமைதியாக எங்களுக்காக பிரார்த்தித்தவர்கள்…

என் அன்பான அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் அனைவருக்கும் ஒரு பெரிய அன்பான அணைப்பு. 🤗❤️

உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

அதே நேரத்தில், எங்களைப் பாராட்டிய கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, எங்களிடம் உள்ள உண்மையான குறைகளை சுட்டிக்காட்டிய கருத்துக்களை புறக்கணிக்க நான் விரும்பவில்லை.

உண்மையான விமர்சனங்களையும் மனதார ஏற்றுக்கொள்கிறோம்.
எங்கு குறை இருக்கிறதோ அங்கு திருத்துவோம்.
எங்கள் ஊழியர்களின் பயிற்சி, வாடிக்கையாளர் சேவை மற்றும் எங்கள் தரநிலைகளை இன்னும் மேம்படுத்துவோம்.

ஆதரவு எங்களுக்கு தைரியம் கொடுத்தது…
விமர்சனம் எங்களைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்தது.

42 வருட பயணத்தில் இதுவும் எங்களுக்கு ஒரு பாடம்.

தவறு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்வோம்…
குறை இருந்தால் திருத்திக்கொள்வோம்…
விழுந்தால் மீண்டும் எழுவோம்…
ஆனால் உங்கள் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க விரும்பமாட்டோம். ❤️

இந்த சில நாட்களில் நீங்கள் காட்டிய அன்புக்கு என்னால் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை —

நன்றி… நன்றி… நன்றி… 🙏❤️

மீண்டும் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறோம்.
இன்னும் பொறுப்புடன்… இன்னும் சிறப்பாக… ❤️🔥

என்னை நம்பும் என் அன்பான வாடிக்கையாளர்களுக்கு… ❤️

நீங்கள் ஒரு நாளில் எங்களை நம்பத் தொடங்கவில்லை. பல வருடங்களாக எங்கள் உணவை வாங்கி, எங்கள் வளர்ச்சியோடு பயணித்து, தினமும் எங்கள் மீது வைத்திருக்கும் அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பொறுப்பு.

அந்த நம்பிக்கையை நான் ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன்.

அதனால்தான், எமது விற்பனை நிலையத்தில் உண்மையில் என்ன நடந்தது, என்னென்ன குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன, அவற்றை நாங்கள் எவ்வாறு சரிசெய்தோம் என்பதனை எந்த மறைப்பும் இல்லாமல் ஒரு காணொளி மூலம் விரைவில் உங்களுக்குக் காட்டவுள்ளேன்.

எங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் உணவின் தரம் அல்லது எமது உற்பத்தி தொடர்பானவை அல்ல; அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையத்தில் பின்பற்றப்பட்ட சில தவறான நடைமுறைகள் மற்றும் ஒழுங்கமைப்புகள் தொடர்பானவை.

தவறு எங்களிடம் இருந்த இடத்தில் அதை மறைக்கப்போவதில்லை. ஏற்றுக்கொள்வோம். திருத்துவோம். மீண்டும் அது நடக்காமல் பார்த்துக்கொள்வோம்.

அதேபோல் எங்களை விமர்சித்தவர்களிடமும் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் முன்வைத்த ஒவ்வொரு நியாயமான விமர்சனத்தையும் கவனமாகப் பார்ப்பேன். உண்மையாக எங்களைத் திருத்திக்கொள்ள உதவும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்வேன்.

மற்றவற்றுக்கு வாதங்களால் பதில் சொல்ல விரும்பவில்லை.
உண்மையும், எங்கள் செயல்களும் பதில் சொல்லட்டும்.

உங்கள் நம்பிக்கையே எங்களுடைய மிகப்பெரிய சொத்து. ❤️
அதைப் பாதுகாப்பது எங்களுடைய பொறுப்பு.

விரைவில் அனைத்தையும் வெளிப்படையாக உங்களுடன் பகிர்கிறேன். 🙏

— Thinesh Bake House ❤️🔥

WE ARE BACK ❤️🙏

Today, after confirming that the necessary corrective and improvement work has been completed, the Court has permitted us to reopen our shop.

During these difficult few days, the amount of love and support we received was something I will never forget.

To everyone who called me, messaged me, commented, visited us, encouraged us and stood beside us — thank you from the bottom of my heart.

My brothers and sisters, a huge hug to every one of you. 🤗❤️

At the same time, I also want to thank those who gave us genuine criticism and pointed out areas where we need to improve. Support gives us strength, but genuine criticism gives us an opportunity to become better.

We will not ignore those comments. We will listen, learn, correct our shortcomings and continue improving our service, staff training and standards.

We don’t claim that we will never make mistakes. But I can promise one thing:

When we make a mistake, we will accept it.
When something needs correcting, we will correct it.
And when we fall, we will rise again stronger. ❤️

This experience has taught us a lot.

Thank you for your trust. Thank you for your criticism. Thank you for your love.

We are ready to welcome you again. ❤️🔥

To My Loyal Customers ❤️

You did not begin trusting us overnight. For many years, you have bought our products, supported our growth and stood beside us. That trust is one of our greatest responsibilities, and I will never take it for granted.

Because you trust me and Thinesh Bake House, I want to be completely transparent with you.

Very soon, I will make a video and show you exactly what happened at our outlet, what issues were pointed out, and what we have done to correct them. I have nothing to hide from the people who have trusted us for so many years.

The issues raised were not related to the quality of our food or our production. They were related to certain improper practices and arrangements at that particular outlet.

Where we were wrong, we will not hide it.

We will accept it.
We will correct it.
We will learn from it.
And we will make sure it does not happen again.

At the same time, I have no anger towards those who criticised us. I will carefully consider every genuine criticism we received. If a comment can genuinely help us improve, I will accept it, learn from it and take action.

For everything else, I don’t want to fight or argue on social media.

Let the facts speak.
Let our improvements speak.
Let our actions speak. ❤️

Your trust is one of our greatest assets, and protecting that trust is our responsibility.

I will share everything with you openly very soon. 🙏❤️

— Thinesh Bake House 🔥

24/09/2026

We are ready for tomorrow
3pm onwards

44 வருட நம்பிக்கை… ❤️எங்களுடைய 44 வருட பயணத்தில் முதல் முறையாக, எங்களது ஒரு விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....
23/09/2026

44 வருட நம்பிக்கை… ❤️

எங்களுடைய 44 வருட பயணத்தில் முதல் முறையாக, எங்களது ஒரு விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த நடவடிக்கை குறிப்பிட்ட ஒரு விற்பனை நிலையத்திற்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. எங்களுடைய ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும் வழமைபோல் இயங்கி வருகின்றன. எங்களுடைய உற்பத்திப் பிரிவிலோ அல்லது தயாரிப்புகளின் தரத்திலோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

குறித்த விற்பனை நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக ஏற்பட்ட தற்காலிக ஒழுங்கமைப்புகள் மற்றும் ஊழியர்களின் நடைமுறைகள் தொடர்பாகவே சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு, அவற்றை உடனடியாகச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

எங்களிடம் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ள வாடிக்கையாளர்கள் எவரும் கவலைப்பட வேண்டாம். உறுதி செய்யப்பட்ட அனைத்து ஆர்டர்களும் கூறிய நேரத்திற்கு, வழமைபோல் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். எங்களுடைய உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் வழமைபோல் தொடர்கின்றன.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் எங்களைத் தொடர்புகொண்டு, தொலைபேசியிலும் செய்திகளிலும் ஆதரவையும் அன்பையும் தெரிவித்த ஏராளமான வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ❤️

எங்களுடைய சந்தோஷமான தருணங்களில் மட்டுமல்ல, இப்படியான கடினமான தருணத்திலும் நீங்கள் எங்களுடன் நிற்பது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அதை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்.

44 வருட நம்பிக்கை ஒரே நாளில் உருவானதல்ல…
ஒரு கடினமான நாளால் எங்கள் பயணமும் முடிந்துவிடாது.

தவறுகளை ஏற்றுக்கொள்வோம்.
திருத்திக்கொள்வோம்.
இன்னும் சிறப்பாக முன்னேறுவோம். ❤️

என்றும் உங்கள் நம்பிக்கையுடன்,
Thinesh Bake House

44 Years of Trust ❤️For the first time in our 44-year journey, one of our outlets has been temporarily closed.We would l...
23/09/2026

44 Years of Trust ❤️

For the first time in our 44-year journey, one of our outlets has been temporarily closed.

We would like to clarify that this situation concerns only this particular outlet. All our other outlets are operating as usual, and there is no issue with our production facility or our products.

Some of the observations raised were related to staff practices and the temporary arrangement of the premises while construction and improvement work is ongoing. We accept the shortcomings that were pointed out and have already taken steps to correct them.

To all our customers who have placed orders with us — please don’t worry. All confirmed orders will be prepared and delivered on time as promised. Our production and delivery operations are continuing as usual.

Since this happened, I have personally received so many calls and messages from customers, friends and well-wishers showing their support. Your trust and encouragement during a difficult moment mean more to us than I can express.

Thank you, guys. ❤️ You have supported us not only during our celebrations, but also during our difficult moments. That is something we will never forget.

We respect the authorities and the legal process, and we will continue to cooperate while correcting everything that has been pointed out.

44 years of trust was not built in one day.
One difficult day will not stop our journey.

We accept. We correct. We improve. We move forward. ❤️

— Thinesh Bake House

18/09/2026

🔥 HOT • FRESH • STRAIGHT FROM THE OVEN! 🍞
Every evening 6 PM – 8 PM at TBH Vavuniya — come grab your freshly baked, oven-hot bread! 💝

சூடாக சாப்பிடுங்க… சுவையை அனுபவிங்க! ❤️

🔥 HOT ROASTED BREAD — JUST Rs. 40! 🔥

OUR NEW PRICE LIST IS HERE! ❤️Clear Prices. Honest Value. No Surprises.At Thinesh Bake House, we believe you deserve to ...
18/09/2026

OUR NEW PRICE LIST IS HERE! ❤️
Clear Prices. Honest Value. No Surprises.
At Thinesh Bake House, we believe you deserve to know exactly what you’re paying for — good quality, fair quantity and great value.

Same taste. Same quality. More transparency.
Thinesh Bake House — Your Favourite Baker Since 1982.

Address

180, Manipay Road, Jaffna
Manipay
40000

Telephone

+94777259245

Alerts

Be the first to know and let us send you an email when Thinesh Bakehouse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thinesh Bakehouse:

Shortcuts

Share

Category