13/04/2026
🎂 கலைநயம் மிக்க கேக் அலங்கார ஆன்லைன் வகுப்பு! 🎨
கேக் அலங்காரம் என்பது ஒரு கலை. பொறுமையும், ரசனையும் கொண்டவர்களால் மட்டுமே சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த நுணுக்கங்களை உங்களுக்கும் கற்றுத்தர நாங்கள் தயார்!
எமது ஆன்லைன் கேக் அலங்கார வகுப்புகள் மீண்டும் மிகச் சிறப்பாக ஆரம்பமாகின்றன. அடிப்படை முதல் நவீன டிசைன்கள் வரை அனைத்தையும் உங்கள் வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்.
📍 வகுப்பில் நீங்கள் கற்றுக்கொள்ள இருப்பவை:
✅ பல்சுவையான கேக் வகைகள்: விதவிதமான சுவைகளில் கேக் தயாரிக்கும் முறைகள்.
✅ விசேட தின கேக்குகள்: பிறந்தநாள், திருமண வைபோகங்கள் மற்றும் அனைத்து கொண்டாட்டங்களுக்குமான நவீன டிசைன்கள்.
✅ அலங்கார கலை: கேக் அலங்காரத்திற்கு தேவையான அழகான பூக்கள் (Flowers) மற்றும் உருவ அமைப்புகள் (Figurines) செய்தல்.
✨ சிறப்பம்சங்கள்:
• நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையத்தின் (Online) ஊடாகத் தெளிவாகப் பயிலலாம்.
• நிஜ பூக்களையே தோற்கடிக்கும் வகையிலான தத்ரூபமான பூக்கள் (realistic sugar flowers) மற்றும் கடினமான உருவ அமைப்புகள் (sculpted figures) அனைத்தும் மிக எளிதாக கற்றுத்தரப்படும். (படங்களைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளலாம்!)
• சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.
⏳ குறைவான இடங்களே உள்ளன! ஆர்வமுள்ளவர்கள் இப்போதே உங்கள் பெயரைப் பதிவு செய்ய கீழே Comment செய்யுங்கள் அல்லது எமது முகநூல் பக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுங்கள்.